சுந்தர்.சி தயாரிப்பில் 'மாயாபஜார்' ரீமேக்

சுந்தர்.சி தயாரிப்பில் 'மாயாபஜார்' ரீமேக்

Published on

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாயாபஜார்' படத்தின் தமிழ் ரீமேக்கைத் தயாரிக்கவுள்ளார் சுந்தர்.சி.

'ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து 'அரண்மனை 3' படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் சுந்தர்.சி. இந்தப் படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால், விரைவில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது. இதனிடையே, புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளார் சுந்தர்.சி. இதனை அவருடைய நெருங்கிய நண்பரும், இயக்குநருமான பத்ரி இயக்கவுள்ளார்.

பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாயாபஜார்' படத்தின் ரீமேக் ஆகும். ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் க்ரைம் காமெடி வகையாகும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in