

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த '10 எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது.
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வந்த படம் '10 எண்றதுக்குள்ள'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வருகிறார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் அனைத்தையும் படக்குழு முடித்திருந்தது. பல இடங்களைப் பார்த்து இறுதியாக ராஜஸ்தானில் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்குவது என படக்குழு முடிவு செய்தது. ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் ராஜஸ்தான் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது, தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இருக்கிறது.
”'10 எண்றதுக்குள்ள' படப்பிடிப்பின் இறுதி நாள் மிகவும் நெகிழ்வான நாளாக இருந்தது. மிகவும் அருமையான படக்குழு" என்று நாயகி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. அப்பணிகள் அனைத்தையும் முடித்து அக்டோபர் 21ம் தேதி இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.