'பிக் பாஸ் 4' அதிகாரபூர்வ அறிவிப்பு

'பிக் பாஸ் 4' அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

2020-ம் ஆண்டுக்கான 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவி இன்று வெளியிட்டது.

2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து திட்டமிடப்படாமல் இருந்தது.

இதனால், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்காது என்று தகவல் பரவியது. ஆனால் இந்தி, தெலுங்கில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆகையால் தமிழிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு 'பிக் பாஸ் 4' தொடர்பான ப்ரமோவுக்கான படப்பிடிப்பை கமல் தொடங்கிவிட்டார் என்று தகவல் வெளியானது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகம் ஆனார்கள். இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 27) இரவு 8 மணிக்கு முக்கிய அறிவிப்பு என்ற ஒரு விளம்பரத்தை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பலரும் இது பிக் பாஸ் தொடர்பான அறிவிப்புதான் எனக் காத்திருந்தனர்.

அதன்படி, தற்போது 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சிக்கான டீஸரை கமல் தனது ட்விட்டர் வீடியோவில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கமல் புதிய கெட்டப்பில் இந்த ப்ரமோவில் நடித்துக் கொடுத்துள்ளார். விரைவில் ட்ரெய்லர் ஒன்று வெளியிடப்படவுள்ளது. அதில்தான் நிகழ்ச்சி என்றிலிருந்து ஒளிபரப்பு குறித்த தகவல் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பெரிய விவாதமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in