

'நானும் ரவுடி தான்' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.
விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம் 'நானும் ரவுடி தான்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றி வெளியிட இருக்கிறது.
படப்பிடிப்பு முடிவடைந்தது, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 'தங்கமே' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. விரைவில் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீடு உள்ளிட்டவை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இப்படத்தின் ஒரு முக்கியமான பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்திருக்கிறார். சூர்யா நடித்திருக்கும் பாத்திரம் பற்றிய விவரங்களைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.
விஜய் சேதுபதி மகன் நடித்திருக்கும் முதல் படம் 'நானும் ரவுடி தான்' என்பது குறிப்பிடத்தக்கது.