

பாபி சிம்ஹா நாயகனாக நடித்திருக்கும் 'கோ 2' திரைப்படம், அக்டோபர் 21ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க, புதுமுக இயக்குநர் சரத் இயக்கி இருக்கும் படம் 'கோ 2'. ஆர்.எஸ்.இன்போடையின்மண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். படம் எப்போது வெளியாகும் என்று அறிவிக்காமல் இருந்தார்கள்.
இந்நிலையில், ஆர்.எஸ். இன்போடையின்மண்ட நிறுவனம் "கோ 2 படத்தின் இசை அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 21ம் தேதி படம் வெளியாகும்" என்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்கள்.
அக்டோபர் 21ம் தேதி விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்திருக்கும் '10 எண்றதுக்குள்ள' படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.