உங்களை ரொம்பவே மிஸ் செய்வேன் அன்பு சார்: 'செம்பருத்தி' பாரதா நாயுடு கண்ணீர்

உங்களை ரொம்பவே மிஸ் செய்வேன் அன்பு சார்: 'செம்பருத்தி' பாரதா நாயுடு கண்ணீர்
Updated on
1 min read

உங்களை ரொம்பவே மிஸ் செய்வேன் அன்பு சார் என்று 'செம்பருத்தி' பாரதா நாயுடு வெளியிட்டுள்ள வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'செம்பருத்தி'. கார்த்திக் ராஜ், ஷாபனா, ப்ரியா ராமன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாரதா நாயுடு. நேற்று (ஆகஸ்ட் 16) 'செம்பருத்தி' சீரியலின் ஒளிப்பதிவாளரான அன்பு காலமாகிவிட்டார். அவருக்கு சீரியலில் நடித்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

அன்புவின் மறைவை முன்னிட்டு பாரதா நாயுடு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது:

"செம்பருத்தி ஒளிப்பதிவாளர் அன்பு சார் நேற்று காலமாகிவிட்டார். எனக்கு இப்போது தான் செய்தி கிடைத்தது. எனது ஒன்றரை வருட செம்பருத்தி பயணத்தில் பல்வேறு அரசியலைச் சந்தித்தேன். உள்ளே பெரிய போர்க்களமே நடக்கும். அப்போது ரொம்ப தனியாக இருந்தேன். என்னை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் உதான் உத்வேகம் அளித்துக் கொண்டே இருப்பார்கள்.

எப்போதுமே எனக்குப் பெரிய உறுதுணையாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் அவரிடம் பேசியிருந்தேன். அவரைப் பற்றி இப்படியொரு செய்தி எதிர்பார்க்கவே இல்லை. அவர் மிகவும் திறமையானவர். கண்டிப்பாக நீ ஜெயிப்பாய், சாதிப்பதை மட்டுமே யோசி என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சுற்றி இருப்பவர்கள் யார் என்ன சொன்னாலும் யோசிக்காதே என்பார். மற்றவர்கள் உன்னைத் தடுக்க நினைக்கிறார்கள் என்றால் நீ ஏதோ சாதித்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறுவார். அன்பு சார் உங்களை ரொம்பவே மிஸ் செய்வேன்"

இவ்வாறு பாரதா நாயுடு தெரிவித்துள்ளார்.

I really really miss u

A post shared by bharatha_naidu (@actress_bharathanaidu_official) on

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in