

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் 'பிக் பாஸ்' சீசன் 4 ஷூட்டிங்கை விரைவில் தொடக்க சேனல் தரப்பினர் முனைந்துள்ளனர். அதற்காக கமல்ஹாசனை வைத்து ப்ரொமோ ஷூட் செய்யும் ஐடியாக்களில் விஜய் டிவி குழு இறங்கியுள்ளது.
ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன், ஜூலையில் ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. மேலும், தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்து வந்ததால் இந்த ஆண்டு நடத்தலாமா? என்கிற யோசனையிலும் இருந்தது.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்க விஜய் டிவி நிர்வாகம் தயாராகி வருகிறது. அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களும் இதற்கான முழு வேலைகளையும் முடித்து ஒளிபரப்பையும் நிகழ்த்தி விட வேண்டும் என சேனல் தரப்பு திட்டமிட்டுள்ளது.
அதற்கு கமல் தரப்பிலும், 'கரோனா லாக் டவுன் காலம் முடிந்து குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் அவசியம் நடத்தலாம்!' என பச்சைக் கொடி காட்ட அவரை வைத்து விரைவில் ப்ரொமோ ஷூட் ஒன்றை நடத்தவும் தயாராகியுள்ளது. ஆகவே, வழக்கம் போல இந்த ஆண்டும் 'பிக் பாஸ்' ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாகலாம்!