

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் ஜெய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ரானி, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'கலகலப்பு 2'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்குப் பிறகு, தற்போது மீண்டும் சுந்தர்.சி - ஜெய் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளனர்.
இந்தப் படத்தை அவ்னி சினி மேக்ஸ் மூலமாக தயாரித்து, இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி. ஆனால் இந்தப் படம் எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஏனென்றால், கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக 'அரண்மனை 3' படத்தை இயக்கி வந்தார் சுந்தர்.சி. வட இந்தியாவில் உள்ள அரண்மனையில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.
ஜெய் நடிக்கவுள்ள படம், 'அரண்மனை 3' படத்துக்கு முன்பா அல்லது பின்பா என்பது விரைவில் தெரியவரும்.