ட்விட்டர் தளத்தில் இணைந்த மிஷ்கின்

ட்விட்டர் தளத்தில் இணைந்த மிஷ்கின்
Updated on
1 min read

முன்னணி இயக்குநரான மிஷ்கின் ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மிஷ்கின். 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'பிசாசு', 'துப்பறிவாளன்', 'சைக்கோ' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் மட்டுமன்றி தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் வலம் வருகிறார்.

திரையுலகம் தாண்டி எப்போதுமே புத்தக வாசிப்பை மட்டுமே பழக்கமாக வைத்திருப்பவர். சமூக வலைதளம் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், முதல் முறையாக ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

@DirectorMysskin என்ற பெயரில் இவருடைய ட்விட்டர் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னைப் பற்றிய செய்திகள், படங்கள் உள்ளிட்டவற்றுக்கு இதிலேயே விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அருண் விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் மிஷ்கின். மேலும், தனது தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் 'பிதா' படத்தைத் தயாரிக்கவும் உள்ளார். இந்த இரு படங்களின் பணிகளும் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in