

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த 'இறைவி' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது. படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
'ஜிகர்தண்டா' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் துவங்கினார் கார்த்திக் சுப்புராஜ். அப்படத்தைத் தயாரிக்க சி.வி.குமார் முன்வந்தார்.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டது. படத்துக்கு 'இறைவி' என்று தலைப்பிட்டார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்தார்.
சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவுற்று இருக்கிறது. தீபாவளி அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
டிசம்பரில் இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ஞானவேல்ராஜா வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது