

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் 'நான் கடவுள்' ராஜேந்திரன்
'புலி' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. போலீஸ் கமிஷனராக விஜய் நடித்து வரும் இப்படத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து படக்குழு ஒருவரிடம் கேட்ட போது, "விஜய் உடனே வரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் 'நான் கடவுள்' ராஜேந்திரன். விஜய்யின் போலீஸ் ஜீப் டிரைவராக நடித்திருக்கிறார் ராஜேந்திரன். முதலில் இவ்வேடத்தில் நடிக்க பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஆனால் இயக்குநர் அட்லீ தான் யாராவது விஜய்யுடன் நடிக்காதவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று 'நான் கடவுள்' ராஜேந்திரனை ஒப்பந்தம் செய்தார். விஜய்யுடன் ராஜேந்திரன் பண்ணும் காமெடி கலாட்டாக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும்" என்று தெரிவித்தார்கள்.
விரைவில் இப்பாடலின் படப்பிடிப்புக்காக சீனாவுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.