உடலமைப்பை மாற்றிய கெளரவ் நாராயணன்: வைரலாகும் புகைப்படம்

உடலமைப்பை மாற்றிய கெளரவ் நாராயணன்: வைரலாகும் புகைப்படம்
Updated on
1 min read

முழுமையாக தன் உடலமைப்பை மாற்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் கெளரவ் நாராயணன். அவருக்குத் திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு', 'இப்படை வெல்லும்' ஆகிய படங்களை இயக்கியவர் கெளரவ் நாராயணன். 'நான் ராஜாவாகப் போகிறேன்', 'சிகரம் தொடு', 'ஆறாது சினம்' ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்போது தனது அடுத்த பட இயக்கத்துக்குத் தயாராகிக் கொண்டே, 'எஃப்.ஐ.ஆர்' படத்திலும் நடித்து வருகிறார்.

கரோனா அச்சுறுத்தலால் தனது சொந்த ஊரான மதுரையில் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வரும் கௌரவ், அடுத்தடுத்துப் படம் இயக்குவதற்கும் கதைகள் தயார் செய்து வருகிறார்.

இந்நிலையில், கரோனா காலத்தில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கௌரவ் நாராயணன். இதற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கெனவே தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பவர், தற்போது மேலும் 6 கிலோ வரை குறைத்து, 6 பேக் வைத்து ஃபிட்டாகி வருகிறார்.

கரோனா அச்சுறுத்தல் காலத்தில் வீட்டிலேயே இருப்பதால், எதிலாவது முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் கெளரவ் நாராயணன். அப்படித்தான் உடலமைப்பு மாற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இப்படி மாறியிருக்கிறார்.

இந்த மாற்றத்தின் மூலம், திரையுலகினர் மத்தியில் கிடைத்த வரவேற்பால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் கெளரவ். கரோனா ஊரடங்கு முடிந்தவுடன், தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபடவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in