தனுஷுடன் நடிக்க விரும்பும் மாளவிகா மோகனன்

தனுஷுடன் நடிக்க விரும்பும் மாளவிகா மோகனன்
Updated on
1 min read

தனுஷுன் நடிக்க மாளவிகா மோகனன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதாசிரியர் என அனைத்துத் துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி இந்தி, ஹாலிவுட் திரையுலகிலும் நடித்துள்ளார்.

நேற்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் தனுஷ். இதனை முன்னிட்டு அவருடன் நடித்தவர்கள், இயக்கியவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன், தனுஷுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ் சார். அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்".

இவ்வாறு மாளவிகா மோகன் தெரிவித்துள்ளார்.

மாளவிகா மோகனனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவருடைய ட்வீட்டுக்கு, "நன்றி... விரைவில் நடக்கும் என நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in