இந்தியில் டப்பிங் செய்யப்படும் 'வலிமை'? 

இந்தியில் டப்பிங் செய்யப்படும் 'வலிமை'? 
Updated on
1 min read

அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தை இந்தியிலும் டப்பிங் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் முடிந்து, முழுமையாக நிலைமை சீரானவுடன் படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று 'வலிமை' படக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்தைத் தயாரித்து வரும் போனி கபூர், 'வலிமை' படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அவ்வாறு இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டால், அஜித் படங்களில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் முதல் படம் என்ற பெயரை 'வலிமை' பெறும் என்பது நினைவுகூரத்தக்கது. ஆகையால், இந்தத் தகவல் அஜித் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'வலிமை' படத்தில் அஜித்துடன் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. மீதி யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற பட்டியலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in