தோல்விகளைக் கடக்க எனக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு பெயர்: அஜித் குறித்து பிரசன்னா புகழாரம்

தோல்விகளைக் கடக்க எனக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு பெயர்: அஜித் குறித்து பிரசன்னா புகழாரம்
Updated on
1 min read

தோல்விகளைக் கடக்க எனக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு பெயர் அஜித் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இந்தக் கரோனா அச்சுறுத்தல் நேரத்தில் எந்தவொரு படப்பிடிப்புமே இல்லாமல் நடிகர்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். சில நடிகர்கள் தங்களுடைய சமூக ஊடகத்தைக் கரோனா விழிப்புணர்வுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், ரசிகர்களோ தங்கள் அபிமான நடிகர்களின் பிறந்த நாள், படம் வெளியான நாள், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படம் எனத் தொடங்கி எதற்கு எடுத்தாலும் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி ட்ரெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுவும், இந்த வழக்கம் கரோனா அச்சுறுத்தல் காலத்தில் அதிகமாகி இருக்கிறது.

தமிழில் அஜித் நாயகனாக அறிமுகமான படம் 'அமராவதி'. அந்தப் படத்தில் நாயகனாக ஒப்பந்தமான நாள் 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி ஆகும். இதனை முன்னிட்டு இன்றே (ஜூலை 26) அஜித் ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast, #28YrsOfAjithism என்ற ஹேஷ்டேகுகளை இப்போதே ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதற்காக பிரத்யேக போஸ்டர்களை உருவாக்கி, பிரபலங்கள் மூலமாக வெளியிட்டுள்ளனர்.

இந்தப் போஸ்டரை வெளியிட்டவர்கள் பட்டியலில் நடிகர் பிரசன்னாவும் ஒருவர்.

இதனை வெளியிட்டு அஜித் குறித்து பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நடிகராக வேண்டும் என்ற என்னுடைய கனவை வலுப்படுத்திய ஒரு பெயர்; என்னை நானே செதுக்கிக் கொள்ளக் கற்றுக்கொடுத்த ஒரு பெயர்; தோல்விகளைக் கடக்க எனக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு பெயர்; கடினமான காலங்களில் என்னைத் தாங்கிப் பிடித்த ஒரு பெயர்; பின்வாங்கி விடாத ஒரு போராளியாக என்னை மாற்றும் ஒரு பெயர்".

இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in