

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜூலை 27 முதல் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களின் பயணங்களை மீண்டும் தொடர்ந்து கண்டுகளிக்கலாம்.
இதுதொடர்பாக ஜீ தமிழ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சேனல் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் அதேசமயம் ஜீ தமிழ் செட்டில் உள்ள அனைத்து பணியாளர்கள் மற்றும் நடிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கிறது.
இதை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படப்பிடிப்புக்கு முன்னர், செட்களை சுத்தப்படுத்தவும், கிருமி நீக்கம் செய்யவும் பாதுகாப்பு நிபுணர்களின் குழு வரவழைக்கப்படுகிறது.
இது படப்பிடிப்புக்கு முன்னால் நடத்தப்படும் 9 மணி நேர செயல்முறையாகும். அபாயங்களைக் குறைப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கிருமி நாசினியால் சுத்தம் செய்யும் நடைமுறை முடிந்ததும் முழுமையான ஆய்வு செய்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு ஒன்றும் வரவழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் செட்டில் நுழையும் முன்னாலும், வெளியேறும் முன்னாலும், நடிகர்கள் மற்றும் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டாய தெர்மல் ஸ்கிரீனிங் (வெப்பப் பரிசோதனை) செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் அதிகபட்சமாக 60 நபர்கள் இருக்கும் மூடப்பட்ட சூழலில் உட்புறத்தில் மட்டுமே படப்பிடிப்புகள் நடைபெறும்.
நடிகர்கள் கட்டாயமாக மாஸ்க்குகளை அணிவார்கள். ஆபத்து காரணிகளை மேலும் குறைப்பதற்காக, குழுவினர் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கு இடையே தேவையற்ற தொடர்பைத் தவிர்ப்பதற்காக நடிகர்கள் தாங்களே சொந்தமாக அலங்காரம் செய்துகொள்வார்கள். சுகாதாரமான சூழலில் சமைக்கப்பட்ட உணவுக்காகவும் செட்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய நேரங்களில் ஒளிபரப்பு :
ரெட்டை ரோஜா – 1:30 – 2:00 pm
என்றென்றும் புன்னகை – 2:00 – 2:30 pm
ராஜா மகள் – 2:30 – 3:00 pm
நீதானே எந்தன் பொன்வசந்தம் – 7:00 – 8:00 pm
கோகுலத்தில் சீதை – 8:00 – 8:30 pm
யாரடி நீ மோகினி – 8:30 – 9:00 pm
செம்பருத்தி – 9:00 – 9:30 pm
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி – 9:30 – 10:00 pm
சத்யா – 10:00 – 10:30 pm
இவ்வாறு சேனல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.