'கபாலி' தயாரித்ததில் பெருமை கொள்கிறேன்: தயாரிப்பாளர் தாணு

'கபாலி' தயாரித்ததில் பெருமை கொள்கிறேன்: தயாரிப்பாளர் தாணு
Updated on
1 min read

'கபாலி' தயாரித்ததில் பெருமை கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இப்படத்தை தாணு தயாரித்திருந்தார். 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தனக்கு நல்ல லாபகரமான படமென்று தயாரிப்பாளர் தாணு பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் தெரிவித்தார்.

இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அளவிலா ஆனந்தம், சூப்பர் ஸ்டாரின் திரையுலகில் தனி மகுடம். வான் உயர உன் புகழை இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டிட எனக்கொரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி ரஜினிகாந்த். என்றும் நம் மக்கள் ரசித்துக் கொண்டாடக்கூடிய #4YearsOfIndustryHitKabali திரைப்படத்தைத் தயாரித்ததில் பெருமை கொள்கிறேன்."

இவ்வாறு தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in