மதம் மாறினார் நடிகை மோனிகா: சினிமாவை விட்டு விலக முடிவு

மதம் மாறினார் நடிகை மோனிகா: சினிமாவை விட்டு விலக முடிவு
Updated on
1 min read

நடிகை மோனிகா முஸ்லிம் மதத்திற்கு மாறினார். இவர் தன்னுடைய பெயரை எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிக்கொண்டார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மோனிகா அழகி, பகவதி, சிலந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தான் முஸ்லிமாக மதம் மாறிவிட்டதாக வெள்ளிக் கிழமையன்று நிருபர்களிடம் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

‘அவரசபோலீஸ் 100’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் சினிமாத்துறைக்கு வந்தேன். அப்போது எனக்கு இரண்டரை வயது. இதுவரை 69 படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய அப்பா இந்து மதத்தை சேர்ந்தவர். அம்மா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். என்னுடைய சின்ன வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மாவின் அரவணைப்பில்தான் வளர்ந்தேன். சின்ன வயதில் இருந்தே குர்தா அணிந்துகொள்ள எனக்குப் பிடிக்கும். அந்த ஆர்வத்தில் முஸ்லிம் மதம் சார்ந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன்.

அதுவே ஒரு கட்டத்தில் நான் முஸ்லிம் மதத்தினை தீவிரமாக பின்பற்ற காரணமாக அமைந்தது. இப்போது முழுமையாக இஸ்லாம் மதத்திற்கே மாறிவிட்டேன். எனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிக்கொண்டுள்ளேன். மதம் மாறியதைத் தொடர்ந்து சினிமா உலகில் இருந்தும் விலக முடிவெடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in