

'ஜில் ஜங் ஜக்' படத்தின் மூலமாக மீண்டும் தயாரிப்பாளராகிறார் சித்தார்த். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்த 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவானவர் நடிகர் சித்தார்த். அப்படத்தைத் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தார்.
இந்நிலையில், சித்தார்த் தனது அடுத்த தயாரிப்புக்கான பணிகளை முடித்துவிட்டார். 'ஜில் ஜங் ஜக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நடித்து, தயாரித்திருக்கிறார் சித்தார்த். முழுப் படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் நாயகியே இல்லாமல் உருவாகும் 'டார்க்' காமெடி வகை படமாகும்.
இப்படத்தை தீரஜ் வைத்தி என்ற புதுமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார், விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 14ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.