

நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு உள்ளது என நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என புதுக்கோட்டை நாடக நடிகர் சங்கத்தினரிடம் நேற்று வாக்கு சேகரித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களை எதிர்த்துப் போட்டியிடுவோர் எங்கள் மீது ஊழல், முறைகேடு போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும்.
நாங்கள் முன்னணி நடிகர்களிடம் ஆதரவு கோரியுள்ளோம். அவர்களெல்லாம் எங்கள் அணிக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ள தமிழக முதல்வரிடம் இதுவரை வாக்கு கேட்டது கிடையாது. எனினும், அவர் எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்றார்.