'பிரபாஸ் 20' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'பிரபாஸ் 20' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

'பிரபாஸ் 20' படத்துக்கு பெயரிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் புதிய படம் தொடங்கப்பட்டது. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும், இந்தப் படத்துக்கு 'ராதே ஷ்யாம்' என்று பெயரிட்டுள்ளது படக்குழு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், பிரபாஸ் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே ஒரே சமயத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, 'மஹாநடி' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ். இதனை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in