சிறுநீரகக் கோளாறால் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி: சிகிச்சைக்கு கமல் உதவி

சிறுநீரகக் கோளாறால் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி: சிகிச்சைக்கு கமல் உதவி

Published on

சிறுநீரகக் கோளாறு பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்கு கமல் உதவி செய்துள்ளார்.

சண்டைக்கலைஞராக அறிமுகமாகி பின்பு நடிகராக மாறியவர் பொன்னம்பலம். 'அபூர்வ சகோதரர்கள்', 'மாநகர காவல்', 'வால்டர் வெற்றிவேல்', 'ஆனஸ்ட்ராஜ்', 'நாட்டாமை', 'உள்ளத்தை அள்ளித்தா', 'மாயி', 'சாமி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'பிக் பாஸ்' சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார் பொன்னம்பலம்.

சிறுநீரகக் கோளாறு பிரச்சினையால் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய சிகிச்சைக்கு கமல் உதவி வருகிறார். அதுமட்டுமன்றி, தினமும் தொலைபேசி வாயிலாக பொன்னம்பலத்தைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.

பொன்னம்பலத்தின் சூழலைக் கருத்தில்கொண்டு அவருடைய இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை கமலே ஏற்றுக்கொண்டார். கமலின் இந்த உதவிக்கு பொன்னம்பலம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in