

தனுஷை வைத்து அனேகன் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த், தனது அடுத்த பட ஹீரோவாக சிவகார்த்திகேயனை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.
இது குறித்து அவரது நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, "கே.வி. ஆனந்த் முன்னணி ஹீரோவுக்கான கதை ஒன்றை எழுதியிருந்தார். ஆனால் தற்போது அனைத்து முன்னணி ஹீரோக்களும் அடுத்த 2 வருடங்களுக்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் அந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்குச் சென்றுள்ளது. இப்போதைக்கு பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றுள்ளது.
கே.வி.ஆனந்த் திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் உள்ளார். அவர் அதை முடித்தவுடன் அதிகாரப்பூர்வமாக சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்படுவார்" என்றார்.
தற்போது அறிமுக இயக்குநர் பாக்யராஜின் இயக்கத்தில் நடித்து வரும் படத்தை முடித்தவுடன் சிவகார்த்திகேயன் கே.வி. ஆனந்த் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.