இந்தியன் - 2 உள்ளிட்ட படங்களின் இறுதிகட்ட பணி நாளை முதல் மீண்டும் தொடக்கம்: சின்னத்திரை படப்பிடிப்பும் ஆரம்பம்

இந்தியன் - 2 உள்ளிட்ட படங்களின் இறுதிகட்ட பணி நாளை முதல் மீண்டும் தொடக்கம்: சின்னத்திரை படப்பிடிப்பும் ஆரம்பம்
Updated on
1 min read

இந்தியன் - 2 உள்ளிட்ட திரைப்படங்களின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் நாளை தொடங்குகின்றன.

கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 3 மாதங்களாக சின்னத்திரை, வெள்ளித்திரை பணிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், தமிழகஅரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு திரைப்பட இறுதிக்கட்ட பணிகள், சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைத்தது.

இதற்கிடையே, கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தால் சென்னையில் மீண்டும் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் திரைப்பட மற்றும் சின்னத்திரை பணிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும்திரைப்பட இறுதிக்கட்ட பணிகள்நாளை முதல் மீண்டும் தொடங்கப்படுகின்றன.

இதில், இந்தியன் - 2, மூக்குத்திஅம்மன் உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்ட வேலைகள் நாளை தொடங்க ஃபெப்சி அனுமதி அளித்துள்ளது. அரசு விதித்துள்ளகட்டுப்பாடுகளுடன், சின்னத்திரைதொடர்கள் படப்பிடிப்பையும் நாளை (ஜூலை 8) முதல் தொடங்க அதன் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் திரைப்பட மற்றும் சின்னத்திரை சங்க உறுப்பினர்கள் மற்றும் தினசரி பணியாளர்கள் தங்கள் பணிகளை வழக்கம்போல தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in