ஹேஷ்டேகுகள் மாறும்; மாற வேண்டியது எதுவும் மாறாது: பிரசன்னா வேதனை

ஹேஷ்டேகுகள் மாறும்; மாற வேண்டியது எதுவும் மாறாது: பிரசன்னா வேதனை
Updated on
1 min read

மறதி ஒரு தேசிய வியாதி என்று வேதனையுடன் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இந்தக் கரோனா ஊரடங்கில் சாத்தான்குளத்தில் ஜெயராம் மற்றும் பென்னிக்ஸ் மரணம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினரை சிபிசிஐடி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதனைத் தொடர்ந்து சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையும் பெரும் சர்ச்சையாக உருவானது. இந்த இரண்டு சம்பவத்துக்கும் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதனிடையே இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஜெயலலிதாவோ ஜெயராஜோ அல்லது ஜெயப்ரியாவோ, அது அடுத்த பரபரப்பான மரணம்/ கொலை/ பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி வரும்வரைதான். அதன் பிறகு நீதி கேட்கும் ஹேஷ்டேகுகள் மாறிவிடும். ஆனால் மாற வேண்டியது எதுவும் மாறாது. இவையெல்லாம் சோர்வை ஏற்படுத்திவிட்டன. சோகம் மட்டுமே எஞ்சுகிறது. மறதி ஒரு தேசிய வியாதி".

இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in