அதிகரித்த மின்சாரக் கட்டணம்: சந்தீப் கிஷன் கிண்டல்

அதிகரித்த மின்சாரக் கட்டணம்: சந்தீப் கிஷன் கிண்டல்
Updated on
1 min read

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தனது ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்துள்ளார் சந்தீப் கிஷன்.

கரோனா ஊரடங்கு காலத்தில் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் அனைவருக்கும் மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருமோ என்ற பயம் இருந்தது. தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் மின்சாரக் கணக்குகள் எடுக்க முடியாத காரணத்தால் சில வழிமுறைகள் மூலமாக அனைவரிடமும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தனது வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக பிரசன்னா தெரிவித்த எதிர்ப்பு பெரும் விவாதமாக உருவானது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பதிலளித்தது. தற்போது மும்பையில் உள்ள முன்னணி நடிகைகள் மற்றும் பொதுமக்கள் பலரும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கில் நாயகனாக வலம் வரும் சந்தீப் கிஷன் மின் கட்டண உயர்வு தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மின்சாரக் கட்டணத்தைப் பார்க்கும்போது சின்ன வயதில் ஆட்டோ மீட்டர் ஓடுவதைப் பார்க்கும் ஞாபகம் வந்தது. புதிதாக வெளியாகும் படங்களின் வார இறுதி நாட்களின் வசூலுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் ஒரு யுத்தத்தைத் தொடங்கினாலும் தொடங்கலாம்".

இவ்வாறு சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in