கரோனா ஊரடங்கு: இயக்குநராக திட்டமிட்டுள்ள நாயகிகள்

கரோனா ஊரடங்கு: இயக்குநராக திட்டமிட்டுள்ள நாயகிகள்
Updated on
1 min read

கரோனா ஊரடங்கில் முழுமையாக கதை ஒன்றை எழுதி, இயக்குநராக சில நாயகிகள் திட்டமிட்டுள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் 100 நாட்களை கடந்து எந்தவொரு அத்தியாவசிய பணிகளுமே இடம்பெறவில்லை. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. இதனால் நடிகர் - நடிகைகள் யாருமே படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

இதனிடையே இந்த ஊரடங்கினை பயன்படுத்தி பல முன்னணி நாயகிகள் கதை எழுதி வருகிறார்கள். ஊரடங்கு முடிந்தவுடன் யாரெல்லாம் இயக்குநர் ஆகப் போகிறார்கள் என்பது தெரியவரும். இந்த ஊரடங்கினை பயன்படுத்தி பார்வதி மேனன், அக்‌ஷரா ஹாசன், சார்மி, சுனு லட்சுமி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதையை எழுதி முடித்துவிட்டார்கள்.

இதில் பார்வதி மேனன் ஒரு கதைக்கு, திரைக்கதை வடிவம் என முழுமையாக வைத்து இயக்குவதற்காக முயற்சித்து வருகிறார். உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அக்‌ஷரா ஹாசன் என்பதால், இந்த ஊரடங்கினை பயன்படுத்தி நண்பர்களோடு கலந்து ஆலோசித்து கதை எழுதி வருவதாக கூறுகிறார்கள்.

சார்மி, சுனு லட்சுமி மற்றும் நித்யா மேனன் மூவருமே கதையை முழுமையாக முடித்து, திரைக்கதை வடிவம் எழுதி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த ஊரடங்கு முடிந்தவுடன் சில நாயகிகளை இயக்குநராக காணவுள்ளது திரையுலகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in