3-வது திருமணம் செய்து கொண்ட வனிதா

3-வது திருமணம் செய்து கொண்ட வனிதா
Updated on
1 min read

பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார்.

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் இருவருடைய திருமணம் இன்று (ஜூன் 27) நடைபெற இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி இன்று மாலை வனிதா விஜயகுமார் வீட்டில் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்தத் திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். மோதிரம் மாற்றிக் கொண்டு, கேக் வெட்டி இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் தம்பதியினருக்குத் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

1995-ம் ஆண்டு விஜய் நடித்த 'சந்திரலேகா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதனைத் தொடர்ந்து நடித்த படங்கள் யாவும் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பதால் திரையுலகிலிருந்து விலகினார். 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007-ல் விவாகரத்து பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010-ல் முடிவுக்கு வந்தது.

முதல் திருமணத்தின் மூலமாக விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது திருமணத்தின் மூலம் ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இரண்டு மகள்களுடன் வனிதா விஜயகுமார் வாழ்ந்து வருகிறார். தற்போது 3-வதாக பீட்டர் பாலை வனிதா விஜயகுமார் திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமண புகைப்படங்களைக் காண: CLICK HERE

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in