இன்று முதல் விஜய் டிவியில் 'ராமாயணம்' ஒளிபரப்பு

இன்று முதல் விஜய் டிவியில் 'ராமாயணம்' ஒளிபரப்பு
Updated on
1 min read

தொலைக்காட்சி ஒளிபரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ராமாயணம்' இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

கரோனா ஊரடங்கில் பல்வேறு பழைய வரவேற்பைப் பெற்ற சீரியல்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதில் 'ராமாயணம்' தொடர், டிடி-யில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சீரியல்களில் ஒன்றாக 'ராமாயணம்' இடம்பெற்றது.

தற்போது 'ராமாயணம்' சீரியல் விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவுள்ளது. இன்று (ஜூன் 16) முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. திங்கள் முதல் சனி வரை தினமும் ஒளிபரப்பாகவுள்ளது.

ராமானந்த சாகர் தயாரித்து, இயக்கியிருக்கும் இந்தத் தொடரில், அருண் கோவில் ராமாவாகவும், தீபிகா சீதாவாகவும், சுனில் லஹ்ரி லட்சுமணாகவும் நடித்துள்ளனர். ராவணனாக அரவிந்த் திரிவேதியும், அனுமனாக தாரா சிங்கும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ராமன் 14 ஆண்டுகள் சீதா மற்றும் லட்சுமணனுடன் வனவாசம் சென்ற காவியத்தைப் பிரதிபலிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in