'கரோனா கஷ்டத்தில் ஒரு சிறிய புன்னகை!'- பாவனாவின் 4-வது மாஷ்அப் வீடியோ 

'கரோனா கஷ்டத்தில் ஒரு சிறிய புன்னகை!'- பாவனாவின் 4-வது மாஷ்அப் வீடியோ 
Updated on
1 min read

கரோனா கஷ்டத்தில் ஒரு சிறிய புன்னகையைக் கொண்டு வரலாமே என்று தான் மாஷ்அப் வீடியோ செய்ததாக பாவனா தெரிவித்தார்.

தொகுப்பாளினி பாவனா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையே தொடர்ந்து 'மாஷ்அப்' வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போதைய கரோனா ஊரடங்கு தனிமைப்படுத்தல் நேரத்தில் புதிய 'மாஷ்அப்' ஆல்பம் ஒன்றை பாடி வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

"தற்போதைய கரோனா சூழலில் கஷ்டமான செய்திகளைக் கேட்டு வருகிறோம். இந்த மாதிரியான நேரத்தில் ஒரு சிறிய புன்னகையைக் கொண்டு வரலாமே என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட மாஷ்அப் வீடியோ இது. கருப்பு, வெள்ளை உடை அணிந்து தமிழ், இந்திப் பாடல்களைக் களமாக வைத்து உருவாக்கியுள்ளேன். இதற்கு முன்பு பதிவு செய்த ஆல்பம் அனைத்தும் ஸ்டியோக்களில் உருவானவை. இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லாததால் நானே வீட்டிலிருந்தே தயார் செய்தேன்.

தமிழ், இந்திப் பாடல்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடலின் பின்னணி இசையை ஒரு ஆங்கிலப் பாடலை வைத்து உருவாக்கினேன். மற்ற ஆல்பம் போல இதுவும் என் குரலிலேயே உருவானது. எங்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள வளாகத்திலேயே ஷூட் செய்து வீட்டிலேயே ரெக்கார்டிங், மிக்ஸிங் என அனைத்து வேலைகளையும் செய்து வெளியிட்டுள்ள மாஷ்அப் வீடியோ இது. இந்த வீடியோ பெரும் கவனத்தை ஈர்த்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!''.

இவ்வாறு பாவனா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in