

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்துக்கு 'கதகளி' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
'இது நம்ம ஆளு', 'ஹைக்கூ' ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கத் தொடங்கினார் பாண்டிராஜ். கத்ரீன் தெரசா நாயகியாக நடித்து வரும் இப்படத்தில் நந்தகுமார், மிமிக் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது கடலூரில் நடைபெறுகிறது. இப்படத்துக்கு 'இடி மின்னல் மழை', 'கதகளி' உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை பரிசீலனை செய்து வந்தார்கள்.
'கதகளி' என்ற தலைப்பு இறுதிச் செய்யப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 60% முடிவுற்று இருக்கிறது.