விஜய் சேதுபதியால் இயக்குநர் ஆனேன்: 'பெண்குயின்' இயக்குநர் நெகிழ்ச்சி

விஜய் சேதுபதியால் இயக்குநர் ஆனேன்: 'பெண்குயின்' இயக்குநர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

விஜய் சேதுபதியால் இயக்குநர் ஆனேன் என்று 'பெண்குயின்' இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெண்குயின்'. இதில் கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், நித்யா கிருபா, ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது 'பெண்குயின்' படம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், விஜய் சேதுபதியால் இயக்குநர் ஆனதாகக் குறிப்பிட்டுள்ளார் ஈஸ்வர் கார்த்திக். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நாடகப் பின்னணியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதிலுள்ள அனுபவங்களால் தான் திரையுலகில் படம் இயக்கியிருக்கிறேன். எனது நலம் விரும்பி விஜய் சேதுபதி. அவர் தான் இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார். கார்த்திகேயன் சந்தானம் சார் கதையைக் கேட்டுவிட்டு, உடனே தயாரிக்க ஒப்புக் கொண்டார்.

ஆகையால் விஜய் சேதுபதி, கார்த்திகேயன் சந்தானம் இருவருமே எனது திரையுலக வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியமானவர்கள். எந்தவொரு அனுபவம் இல்லாமல் வருபவனை நம்புவதற்கு ஒரு தைரியம் வேண்டும். நான் எப்படி இயக்குவேன், எப்படி ஷாட் வைப்பேன் என்று எதுவுமே தெரியாமல் இந்த வாய்ப்பை என்னையும், கதையையும் நம்பிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு மிகவும் நன்றி"

இவ்வாறு ஈஸ்வர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in