வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல: ரசிகைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்

வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல: ரசிகைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்
Updated on
1 min read

வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல என்று ரசிகைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ் செய்துள்ளார்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தமிழில் 'க/பெ ரணசிங்கம்', 'திட்டம் இரண்டு', 'துருவ நட்சத்திரம்', 'இடம் பொருள் ஏவல்' மற்றும் தெலுங்கில் 'டக் ஜெகதீஷ்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணிகளும் இல்லாமல் வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். இந்த கரோனா காலத்தில் டெட் எக்ஸில் ஆற்றிய உரையை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு அவரது பெண் ரசிகை ஒருவர் "ஹாய் அக்கா நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை. திருப்பூரில் இருக்கும் நான் உங்களுக்காக உயிரைக் கூட விடுவேன்.. உங்களை மிகவும் நேசிக்கிறேன்.. உங்கள் நடிப்பு மிக அருமை.. இவ்வுலகத்துக்கு நீங்கள் ஒரு அடையாளம்.. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் அக்கா. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அக்கா" என்று கருத்து தெரிவித்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் "மிக்க நன்றி.. ஆனால் இது போன்ற வார்த்தைகளை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல.. எப்போதும் அந்த வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.. உங்களைப் போன்ற ரசிகை கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனா நான் எப்போதும் உங்களுக்கு தோழியாக இருப்பேன். இனி மீண்டும் அது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருந்தால்.." என்று தெரிவித்துள்ளார்.

Clicked @antonyfernandophotography

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in