விஜய்யுடன் இணையும் மடோனா செபாஸ்டின்?

விஜய்யுடன் இணையும் மடோனா செபாஸ்டின்?
Updated on
1 min read

'தளபதி 65' படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் இந்நேரத்துக்கு 'மாஸ்டர்' படம் வெளியாகியிருக்கும்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தக் கூட்டணி இணைப்பில் உருவாகும் 4-வது படம் இதுவாகும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஜய் பிறந்த நாளன்று இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'தளபதி 65' படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நாயகியாக அல்லாமல் வேறொரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in