சூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்

சூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்
Updated on
1 min read

சூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது என்று 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் பிரட்ரிக் தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி இந்தப் படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைக் கொண்டதாக இந்தப் படம் உருவாகியுள்ளது. மேலும், சமூக வலைதளத்தில் பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே இயக்குநர் பிரட்ரிக் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"மாற்றம் ஒன்றே மாறாதது. என் தம்பிகளா, தங்கச்சிங்களா, பெத்தவங்கள நல்ல பாத்துக்கோங்க. நம்பிக்கையை விட்றாதிங்க. மதங்களை கடந்து மனிதமே முக்கியம். தேசிய கல்வி கொள்கை, மாணவர்களின் நலனே முதன்மை. அன்பை விதைப்போம். ஜோதிகா, சூர்யா தயாரிப்பு.

எல்லாத்துக்கும் மேல ஒருத்தரோட வலியைப் பார்க்க முடியாமல் வரும் கண்ணீர். என்ன மாதிரி பலருக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியைத் தன் வெற்றியாய் நினைச்சு மகிழும் மனம். இது எல்லாத்துக்கும் மனசு வேண்டும். ஆமா.. ரொம்பவே பெரிய மனசு சார் உங்களுக்கு"

இவ்வாறு இயக்குநர் பிரட்ரிக் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in