

எந்தப் பாடமும் கற்கவில்லையா என்று வெட்டுக்கிளிகள் தொடர்பான வீடியோ ஒன்றைப் பகிர்ந்து மீரா சோப்ரா சாடியுள்ளார்.
இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தல் இன்னும் குறைந்தபாடில்லை. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. இதனிடையே சில மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் இருக்கிறது.
இது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் உலவி வருகின்றன. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பிரியாணி அமோகமாக விற்பனையாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிலர் வெட்டுக்கிளிகளைப் பிடித்துக் கொண்டுப் போகும் வீடியோ ஒன்றை பகிர்ந்து மீரா சோப்ரா கூறியிருப்பதாவது:
"இந்த ஃபார்வர்ட் எனக்கு வந்தது. இந்த வீடியோ உண்மையானது தானா. மக்கள் உண்மையிலேயே வெட்டுக்கிளிகளைச் சாப்பிடுகிறார்களா? தற்போது நிலவும் கரோனா கிருமி தொற்றுப் பிரச்சினையிலிருந்து அவர்கள் எந்த பாடமும் கற்கவில்லையா?"
இவ்வாறு மீரா சோப்ரா தெரிவித்துள்ளார்.