ரீமேக் முயற்சியில் அவள் அப்படித்தான்

ரீமேக் முயற்சியில் அவள் அப்படித்தான்
Updated on
1 min read

தமிழில் மீண்டும் 'அவள் அப்படித்தான்' படத்தை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

1978-ம் ஆண்டு ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அவள் அப்படித்தான்'. இப்போது வரை இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. காரணம், படத்தில் சொல்லப்பட்டு இருந்த மெசேஜ். பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கூட இந்தப் படம் குறித்து மிகவும் புகழ்ந்து பேசியிருப்பார்கள்.

தற்போது இந்தப் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் பத்ரி. தற்போது 'ப்ளான் பண்ணி பண்ணனும்' படத்தை இயக்கி முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 'அவள் அப்படித்தான்' ரீமேக்கை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த ரீமேக்கிற்கு தயாரிப்பாளர் முடிவாகிவிட்டாலும், உரிமை யாரிடம் இருக்கிறது என்பதற்கான தேடலில் இறங்கியுள்ளார் பத்ரி.

ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன், ரஜினி கதாபாத்திரத்தில் சிம்பு, கமல் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டாவை நடிக்க வைக்கலாம் என்ற யோசனையையும் தெரிவித்துள்ளார். இதில் ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது மட்டும் உறுதி எனவும் பத்ரி குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமாக இவரது படங்களுக்கு யுவன்தான் இசையமைப்பாளராகப் பணிபுரிவார். ஆனால், 'அவள் அப்படித்தான்' ரீமேக்கிற்கு இளையராஜாவுடன் பணிபுரிய ஆசை எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பத்ரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in