

விஜய்யிடம் கதை சொன்னதாகவும், அந்தப் படத்தின் நிலை என்ன என்பது குறித்தும் அருண்ராஜா காமராஜ் பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'கனா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் அருண்ராஜா காமராஜ்.
அப்போது அருண்ராஜா காமராஜ் விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் அது நடக்கவில்லை. இதுகுறித்துப் பேசியுள்ள அருண்ராஜா, தான் விஜய்யிடம் ஒரு படத்துக்கான யோசனையைச் சொன்னதாகவும் ஆனால் அது திரைப்படமாக இது சரியான நேரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், "சரியான நேரம் வரும். ஆனால், அது ஒரு அனுபவம். ஏனென்றால் விஜய் சாருக்குக் கதை சொல்லக் கூட நிறையப் பேருக்கு வாய்ப்பு கிடைக்காது. அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது, அவர் என் தோள்களின் மீது கை வைத்து, 'என்ன நண்பா எப்போ ஷூட்டிங் போறோம்' என்று கேட்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்" என்கிறார் அருண்ராஜா காமராஜ்.