கரோனா போர் வீரர்களுக்காக இளையராஜா உருவாக்கியுள்ள பாடல்

கரோனா போர் வீரர்களுக்காக இளையராஜா உருவாக்கியுள்ள பாடல்
Updated on
1 min read

கரோனா போர் வீரர்களுக்காக இளையராஜா ஒரு பாடலை எழுதி, இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மட்டும் இரவு-பகலாக தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

கரோனா போர் வீரர்களுக்காக பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பாடல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். தற்போது இளையராஜாவும் கரோனா போர் வீரர்களுக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்தது மட்டுமன்றி பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதியுள்ளார். இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். பியானோ, கீ போர்டு உள்ளிட்ட வாத்தியங்களின் இசையை இளையராஜாவின் மேற்பார்வையில் லிடியன் செய்துள்ளார். 'பாரத பூமி' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் இளையராஜா.

மேலும், இந்திப் பாடலைப் பாடியுள்ளார் சாந்தனு முகர்ஜி. இந்தப் பாடலை குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட பலர் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in