'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கான பொருட்செலவு எவ்வளவு? - கெளதம் மேனன் பதில்

'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கான பொருட்செலவு எவ்வளவு? - கெளதம் மேனன் பதில்
Updated on
1 min read

'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கான பொருட்செலவு குறித்து இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கில் தான் எழுதி வைத்திருந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' 2-ம் பாகத்திலிருந்து ஒரே ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். அதில் சிம்பு - த்ரிஷா இருவரும் வீட்டிலிருந்தபடியே நடித்துக் கொடுத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை அமைத்துள்ளார்.

'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்தப் படம் ஆதரவையும், விவாதத்தையும் ஒருசேரப் பெற்றுள்ளது. இந்தக் குறும்படத்துக்கு ஆன பொருட்செலவு குறித்து இயக்குநர் கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:

"இதை எடுக்க எனது ஐ ஃபோனுக்காக நான் ஒரு RIG வாங்கினேன். நடிகர்கள் இருவரும் எனக்காக, நான் கேட்டதற்காக நடிக்க ஒப்புக்கொண்டனர். என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை என்றேன். சிறுபிள்ளைத்தனமாகப் பேசாதீர்கள், இதை எடுப்போம் என்று முன் வந்தார்கள். ரஹ்மான் அவர்கள் கூட வெளியிலிருந்து இசைக் கலைஞர்களை வாசிக்க வைத்து பதிவு செய்தார்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இசையைப் பயன்படுத்த சோனி மியூஸிக் நிறுவனத்திடம் அனுமதி பெற்றேன். நான் படத்தை எனது ஒன்றாக யூடியூப் சேனலில் தான் வெளியிட்டிருக்கிறேன். அதன் மூலம் எவ்வளவு பணம் வருகிறதோ அதை அனைவரிடமும் சரிசமமாகப் பிரித்துக் கொடுப்பேன். எனவே, இப்போதைய கணக்கு, படத்துக்காகச் செலவழிக்கவேயில்லை"

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in