சூர்யாவுக்கு விபத்தா? உண்மையில் நடந்தது என்ன?

சூர்யாவுக்கு விபத்தா? உண்மையில் நடந்தது என்ன?
Updated on
1 min read

சூர்யாவுக்கு விபத்து என்று பரவிவரும் தகவல் குறித்து விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. கரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் வெளியீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கினால் வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறார் சூர்யா. இதனிடையே இன்று காலை முதல் சமூக வலைதளத்தில் சூர்யா கையில் மருத்துவமனை ஸ்டிக்குடன் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்களோ #GetWellSoonSuriyaAnna என்று ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள்.

இது தொடர்பாக சூர்யா தரப்பில் விசாரித்தபோது, "கடந்த வாரம் சூர்யா சார் வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது, கையின் விரல் பகுதியில் சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டன. உடனே மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். இப்போது 90% குணமாகிவிட்டார்.

இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் எல்லாம் மிகவும் பழையவை. அந்தப் புகைப்படத்துடன் இப்போது உள்ள விஷயத்தை இணைத்து தகவலை வெளியிட்டதால் ரசிகர்களும் ஏமாற்றமடைந்து ட்ரெண்ட் செய்கிறார்கள். அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in