

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இஸித்ரோ (Isidro) என்று இந்த நிறுவனத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் பாடகர் மற்றும் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நாயகியாக வலம் வருகிறார். அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், 2016 வரை இந்தியில் நடிப்பதற்கான கால்ஷீட்டுகளையும் தந்துள்ளார்.
தற்போது ஸ்ருதி தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தில் குறும்படங்கள், டிஜிட்டல் படங்கள், மியூஸிக் வீடியோக்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.