சதீஷ் பிறந்த நாளுக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து

சதீஷ் பிறந்த நாளுக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து
Updated on
1 min read

சதீஷ் பிறந்த நாளுக்கு தனது ட்விட்டர் பதிவில் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தற்போது 'ராஜவம்சம்', 'பூமி', 'பிஸ்தா', 'ரங்கா', 'டெடி', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுடன் ஹர்பஜன் சிங் நாயகனாக நடித்து வரும் 'பிரண்ட்ஷிப்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்று (மே 23) சதிஷுக்கு பிறந்த நாளாகும். பலரும் அவருக்கு சமூக வலைதளத்தில் தங்களுடைய வாழ்த்தை பதிவிட்டு வருகிறார்கள். சதீஷுக்கு பிறந்த நாள் வாழ்த்தாக ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒருத்தர சிரிக்க வைக்கறது மிக பெரிய விஷயம் அத ரொம்ப சுலபமா செஞ்சு மக்கள் மனசுல சிரிப்பு நாயகனா இடம் பிடிச்சு அசத்துறீங்க. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ சதீஷ். நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள். 'பிரண்ட்ஷிப்' படத்தில் உங்கள் சிரிப்பு மழையில் நனைய காத்திருக்கிறேன்"

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் சதீஷ் நன்றி தெரிவித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in