நடிகர் சங்கத் தேர்தலில் ஈடுபாடு காட்டாத அஜித்!

நடிகர் சங்கத் தேர்தலில் ஈடுபாடு காட்டாத அஜித்!
Updated on
1 min read

நடிகர் சங்கத் தேர்தல் விவாகரம் தொடர்பாக 'பாண்டவர் அணி' சந்திக்க நேரம் கேட்டபோது, இதுவரை நேரம் ஒதுக்காமாலேயே தவிர்த்து வருகிறார் அஜித்.

செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் நடைபெற இருக்கிறது. இந்தாண்டு தேர்தலில் சரத்குமார் அணி மற்றும் விஷால் அணி என இரண்டு பிரிவாக போட்டியிட இருக்கிறார்கள்.

'பாண்டவர் அணி' என்று பெயரிடப்பட்டு இருக்கும் விஷால் அணி, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரையும் சந்தித்து பேசிவருகிறார்கள். இச்சந்திப்பு குறித்து விஷால், "நாங்கள் அனைவரையும் சந்தித்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கோரவில்லை. கண்டிப்பாக வாக்களிக்க வாருங்கள் என்று கூறி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பலரையும் சந்தித்து விட்ட 'பாண்டவர் அணி' அஜித்தை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பில் இருப்பதால் சொல்கிறேன் என்று கூறியவர், தற்போது வரை நேரம் ஒதுக்கவே இல்லை.

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் என்பதால் அஜித் தலையிட விரும்பவில்லை என கூறப்படுகிறது. "அஜித் சார் நேரம் ஒதுக்கினால் கண்டிப்பாக போய் சந்திப்போம்" என்று விஷால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரை நேற்று அஜித் சந்தித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in