சாந்தனு இயக்கத்தில் ‘கொஞ்சம் கரோனா நிறைய காதல்’- குறும்படம் வெளியீடு

சாந்தனு இயக்கத்தில் ‘கொஞ்சம் கரோனா நிறைய காதல்’- குறும்படம் வெளியீடு
Updated on
1 min read

ஊரடங்கு கால வாழ்க்கையை பற்றி குறும்படம் ஒன்றை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்தி பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சாந்தனு சற்று வித்தியாசமாக கரோனா ஊரடங்கு கால வாழ்க்கையை பற்றி குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த குறும்படத்துக்கு ‘கொஞ்சம் கரோனா கொஞ்சம் காதல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி ஆகிய இருவர் மட்டுமே நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க ஐபோனால் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பது, இருக்கும் பொருட்களை கொண்டு சிக்கனமாக வாழ்க்கையை நடத்துவது, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உதவுவது போன்ற விஷயங்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. மொத்தம் 7:28 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in