7 படங்களைக் கைப்பற்றியது அமேசான்: என்ன படம்? எப்போது ஒளிபரப்பு?

7 படங்களைக் கைப்பற்றியது அமேசான்: என்ன படம்? எப்போது ஒளிபரப்பு?
Updated on
1 min read

இந்திய திரையுலகில் முக்கியமான 7 படங்களின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளது அமேசான் நிறுவனம்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் பணிகளும் நடைபெறவில்லை. மேலும் இந்தியா முழுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எந்தவொரு திரைப்படமும் வெளியாகவில்லை.

கோடை விடுமுறை வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட படங்கள் யாவுமே கடும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை பயன்படுத்தி வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படங்களை நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது அமேசான் நிறுவனம்.

டிஜிட்டலில் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிட முடியாது என்பதால், அதற்கான விலையைக் கேட்டனர் தயாரிப்பாளர்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தையில், திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது தெரியாத காரணத்தால் பல தயாரிப்பாளர்கள் நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டுக்கு தயாரானார்கள். திரையரங்கு உரிமையாளர்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பல படங்களைக் கைப்பற்றியது அமேசான் நிறுவனம். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அமேசான் நிறுவனம் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.

இன்று (மே 15) காலை தாங்கள் கைப்பற்றிய படங்களையும், எப்போது அவை வெளியிடப்படும் என்ற தகவலையும் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி

பொன்மகள் வந்தாள் (தமிழ்) - மே 29

குலாபோ சிதாபோ (இந்தி) - ஜூன் 12

பெண்குயின் (தமிழ்) - ஜூன் 19

லா (Law) (கன்னடம்) - ஜூன் 26

ப்ரெஞ்ச் பிரியாணி (கன்னடம்) - ஜூலை 24

சகுந்தலா தேவி (இந்தி) - இன்னும் முடிவாகவில்லை

சுஃபியும் சுஜாதாவும் (Sufiyum Sujatayum) (மலையாளம்) - இன்னும் முடிவாகவில்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in