தன்னைப் பற்றிக் கடிதம் எழுதி சமூக வலைதளத்தில் வெளியிட்ட டிடி

தன்னைப் பற்றிக் கடிதம் எழுதி சமூக வலைதளத்தில் வெளியிட்ட டிடி
Updated on
1 min read

தன்னைப் பற்றி ஒரு கடிதம் எழுதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டிடி.

கரோனா ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலரும் நேரலை, ரசிகர்களுடனான கலந்துரையாடல், வீடியோக்கள் வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். நேரலையின் வருமாறு டிடியின் சமூக வலைதளப் பக்கங்களிலும் ரசிகர்கள் அவ்வப்போது வேண்டுகோள் வைத்து வந்தனர்.

அந்தச் சமயத்தில் தான் தனக்கு கால் முறிவு ஏற்பட்டு, வீட்டில் ஓய்வில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் டிடி. இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, தன்னைக் குறித்து 'நான் இதைத்தான் நம்புகிறேன்' என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டிடி. அதில் அவர் கூறியிருப்பதாவது:

"உங்கள் மனம் உடையலாம்,

திருமணம் முறியலாம்,

உங்கள் நம்பிக்கையை மற்றவர்கள் உடைக்கலாம்,

உங்கள் குணத்தைப் பற்றி மற்றவர்கள் மோசமாகப் பேசலாம்,

ஆனால் என்ன ஆனாலும், நீங்கள் எப்படி உணர்ந்தாலும்,

தினமும் எழுந்து, உடை உடுத்தி, உங்கள் வேலைக்குச் சரியாகச் சென்றால்

நீங்கள் வெற்றி பெறுவீர்கள்...

உங்கள் பணியின் தரத்தை யாரும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது".

இவ்வாறு டிடி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in