வாட்ஸ் அப், செய்தி சேனல் என எதையும் பார்ப்பதில்லை: ஸ்ருதி ஹாசன்

வாட்ஸ் அப், செய்தி சேனல் என எதையும் பார்ப்பதில்லை: ஸ்ருதி ஹாசன்
Updated on
1 min read

வாட்ஸ் அப், செய்தி சேனல் என எதையும் பார்ப்பதில்லை என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே, வெள்ளித்திரை - சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். தங்களுடைய சமூக வலைதளங்களில் மட்டும் கரோனா தொடர்பான விழிப்புணர்வுப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது முதலே ஸ்ருதி ஹாசன் மும்பையில் இருக்கிறார். இந்த ஊரடங்கு சமயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் கூறியிருப்பதாவது:

"ஊரடங்கில் வீட்டிலிருக்கும்போது வழக்கத்தை விட அதிக வேலைகள் பார்க்கிறேன். தினமும் சமையல், வீட்டைச் சுத்தம் செய்வது, உடற்பயிற்சி, பழைய பாணியில் வீட்டைத் துடைப்பது நல்ல உடற்பயிற்சியாக இருக்கிறது. என் வீடு இரண்டு மாடி.

பாடல்களுக்கு மெட்டமைக்கிறேன். எனது இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு, வீடியோவுக்குத் தேவையான ஒப்பனையைச் செய்து கொள்கிறேன். வழக்கத்தை விட அதிக நேரம் உறங்குகிறேன். நடுவில் பல வருடங்கள் நான் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டவள்.

நிறைய வாட்ஸ் அப் குழுக்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன். தனிமை என்பது உடலளவில் மட்டுமல்ல. தொற்று எண்ணிக்கை பற்றி தொடர்ந்து வாட்ஸ் அப் செய்திகளைப் பார்த்துப் பயப்பட விரும்பவில்லை. ஐந்தோ, ஐம்பதோ தொற்று மோசமானதுதான். நான் செய்தி சேனல்களையும் பார்ப்பதில்லை. சில நாட்களுக்கு ஒரு முறை என் மருத்துவ நண்பரிடம் பேசி என்ன சூழல் என்று தெரிந்துகொள்வேன்".

இவ்வாறு ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in