Published : 11 May 2020 02:12 PM
Last Updated : 11 May 2020 02:12 PM

என் குழந்தைகளின் அம்மா: நயன்தாரா புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் பகிர்வு

என் குழந்தைகளின் அம்மா என்று நயன்தாரா புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

நேற்று (மே 10) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளம் முழுக்கவே அன்னையர் தின வாழ்த்துகளைக் காண முடிந்தது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அம்மாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இதில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது:

"எதிர்காலத்தில் எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளின் அம்மாவின் கைகளில் இருக்கும் குழந்தையின் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்".

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Happy Mother’s Day to the mother of the child in the hands of the mother of my future children ... #Happymothersday #mothersday #happymothersday

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x