ரஜினியின் 'பேட்ட' படத்தின் பின்னணி ரகசியங்கள்

ரஜினியின் 'பேட்ட' படத்தின் பின்னணி ரகசியங்கள்
Updated on
1 min read

ரஜினி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'பேட்ட' படத்தின் பின்னணி ரகசியங்கள் சிலவற்றை படக்குழு வெளியிடுள்ளது.

2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் 'பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது கரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் பல்வேறு படக்குழுவினர் தங்களுடைய படக்குழுவினரின் பின்னணி ரகசியங்கள் சிலவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அவ்வாற்று 'பேட்ட' படக்குழுவினரும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

என்னவென்றால், பேட்ட வேலன் கதாபாத்திரம் சிறையில் அணிந்திருக்கும் சீருடை எண் 165. இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 165வது படம் என்பதற்கான குறியீடு அது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், முக்கியமான சண்டைக் காட்சியான நுன்சாகு சண்டைக் காட்சிக்காக சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹைன் மேற்பார்வையில் ரஜினிகாந்த் 50 நாட்கள் பயிற்சி செய்துவிட்டே நடித்துள்ளார்.

இறுதியாக, படத்தின் தொடக்கத்தில் திரையிடப்பட்ட சூப்பர் ஸ்டார் என்ற கிராபிக்ஸ் 'பாபா' படத்துக்குப் பிறகு 'பேட்ட' படத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போல அந்த கிராபிக்ஸுக்காக உருவாக்கப்பட்ட இசை, 1997ல் வெளியான 'அருணாச்சலம்' படத்துக்குப் பிறகு பேட்ட படத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in